கண் கழுவுதல் பயிற்சி

உப்புத் தண்ணீரில் (உப்பு கலந்த தண்ணீர் அல்ல) கண்களை சிமிட்டுதல்.
கைகளைக் கொண்டு கழுவுதல் அல்ல.

ஒரு அகலமான பாத்திரத்தில் அதன் முக்கால் கொள்ளளவு, உப்புத் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தரையில் நன்றாக அமர்ந்து கொண்டு உப்புத்தண்ணீர் பாத்திரத்தில் முகத்தை மூழ்கி, நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு கண்களை சிமிட்ட வேண்டும். அவ்வளவுதான் பயிற்சி.

உங்களால் முடிந்த அளவு தண்ணீரில் இவ்வாறு மூழ்கியிருக்க வேண்டும். காது தண்ணீரில் மூழ்கக் கூடாது.

இப்பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறை முடிந்த அளவு செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் மூழ்கி இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

இதனால் கிடைக்கும் நன்மைகள் :

கண்களில் தூசு, அழுக்கு, எரிச்சல், நமைச்சல் இருந்தால் நீங்கிவிடும். அத்துடன் மூக்கில் இருக்கும் அழுக்கு, சளியும் வெளியே வந்துவிடும். வாய்க்குள் மற்றும் நாக்கில் இருக்கும் அழுக்கு வெளியே வந்துவிடும்.

இந்தப் பயிற்சியில் முகத்தில் முழுவதுமாக தண்ணீர் படுவதால் முகத்தில் சுருக்கங்கள் விழாது. பருக்கள் இருந்தால் குறைந்து விடும். முகம் பளபளப்பாகும். பற்கள் சுத்தமாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்பயிற்சியை வாரம் ஒரு முறையாவது செய்யலாம்.

இது அழகுக் குறிப்பு மட்டுமல்ல, ஆரோக்கியக் குறிப்பும் கூட.