அமேசான் பிரைமில் 7 இந்திய திரைப்படங்கள்

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் கொரோனவால் மூடப்பட்டுள்ளன. திரைப்படம் என்பது திரையரங்குகளில் வெளியாவது என்ற நிலை தற்பொழுது மாறிவருகிறது. அதற்கேற்ப வெப் சீரிஸ் கதைக்களங்களின் பலமும் கூடிவருகிறது.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இணையதளங்களில் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்து, அதன்படி 2டி தயாரிப்பில் உருவான ஜோதிகா நடிக்கும் “பொன்மகள் வந்தாள்” வரும் 29 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இந்திய அளவில் 7 படங்கள், அதுவும் பல முன்னணி நடிகை, நடிகர்களின் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது இந்திய சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பென்குயின், அமிதாப்பச்சன் நடிக்கும் குலாபே சிதபே, வித்யபாலனின் சகுந்தலா தேவி : ஹியூமன் கம்ப்யூட்டர், கன்னடப் படமான லா, பிரென்ச் பிரியாணி, மலையாள படமான சோலியும் சுஜாதாவும் வெளியாகவுள்ளன.