தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பாக நிவாரண நிதி மற்றும் பொருட்கள்

 

சாய்பாபாகாலனி தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பாக  முதல்வர் கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் மூன்று லட்சம் மற்றும் 500 அரிசி மூட்டைகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதிக்கு பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் சங்க அமைப்பினர்கள் தாமாக முன்வந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் கோவை சாய்பாபாகாலனி பகுதி, தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பாக ஊரடங்கு துவங்கிய நாள் முதல் நலிவுற்ற ஏழை, எளியவர்கள் மற்றும் வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம் போன்ற பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் உணவு மற்றும் மளிகை நிவாரணப் பொருட்கள் என பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் ஆனந்தம் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், சுதாகர் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் தடுப்பு நிவாரண நிதிக்கென ரூபாய் முன்று லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணியிடம் வழங்கினர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொடர்ந்து உணவளித்து வரும் ஈதல் அமைப்பினருக்கு ஐந்து கிலோ வீதம் 500 அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டது.