சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்

– கள ஆய்வுக்குழு அலுவலர்கள்

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் முன்னிலையில் நடைபெற்றது.

கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி ஆகியோர் பேசுகையில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்வதையும், அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கண்காணித்திட வேண்டும். காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளை விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் (கலால்) கலைவாணி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன், துணை இயக்குநர் (சுகாதாரம்) அருணா, மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், ரவி, மகேஷ் கனகராஜ், செந்தில்அரசன், செல்வன்,  உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர், ஒருங்கிணைப்பாளர் தூய்மை பாரதம் திருமால், மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.­