கவுண்டம்பாளையம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தின், 6 மற்றும் 7 ஆகிய வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர், எம்.ஜி.ஆர் நகர், வள்ளி நகர், ராஜீவ்காந்தி வீதி மற்றும் வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சரவணம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து 1265 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் முத்துச்சாமி, பகுதி கழக பொறுப்பாளர் மதியழகன், வட்ட கழகச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், குமரேசன், முன்னாள் பகுதி செயலாளர் சுந்தரம், ஆர்.சி.தியாகராஜ், மைக்கேல், சண்முகம், கிருஷ்ணன், நாகராஜ், சங்கர், முனீஸ், ஆனந்த்பாபு, பழனியப்பன், சம்பத், மரக்கடை ரமேஷ், தினேஷ், சுப்பிரமணியம், ஜாகீர் உசேன், வெங்கட், சிவக்குமார், சிவசாமி, சங்கரபாண்டியன், ஆர்.சண்முகம், டி.மணி, வட்ட கழகச் செயலாளர்கள் சி.டி.சி ராஜா, பிரபாகரன், நாகா முரளிபிரகாஷ், தன்ராஜ், பகுதி துணைச் செயலாளர் ரேவதி, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், பகுதி ஒருங்கிணைப்பாளர் கவின் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், 6 மற்றும் 7 வது வார்டுகளுக்குட்பட்ட கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.