ஆதார் கார்டு இல்லாமல் மது வழங்கக்கோரி மது பிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு போட்டிருந்தது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து கோவை  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதிகாலை ஆறு மணிக்கே பூமார்க்கெட் அர்ச்சனா திரையரங்கம் அருகே காத்திருந்த மது பிரியர்கள் டோக்கனை வாங்கினர். இந்நிலையில் காவல் துறையினர் வரைந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றவர்கள், அதிலேயே உட்கார்ந்து இருந்தனர். ஒரு சில கட்டங்களில் செருப்பு, கல், தங்களது பை ஆகியவற்றை வைத்திருந்தனர். 44 நாட்கள் கழித்து மதுபான கடை திறக்கப்பட்டதாகவும், அரசு ஆதார் கார்டை கேட்காமல் கொடுக்க வேண்டும்  எனவும் தெரிவித்தனர். ஆதார் கார்டு இல்லாமல் மது கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோவை கிட்டாம்பாளையம் பகுதியிலுள்ள மதுபான கடையில் ஒரு கிலோ  மீட்டருக்கு மேல் மக்கள் வரிசையில் நின்று மது வாங்கிசெல்கின்றனர். பெரும்பாலான மதுபான கடைகளில் அனைத்து வயதினரும் வாங்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.