பத்திரிக்கையாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா தொற்று பரிசோதனை

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று திரட்டுகிறார்கள். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றோரிடம் பேட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில்தான் சென்னையில் பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

  1. இதனை தொடர்ந்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின்பேரில் 1வாரத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு ரேபிட்டோ டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதன் மூலம் சரியான முடிவுகள் வராததால் இன்று செவ்வாய்க்கிழமை (28.04.2020) கோவை சித்தாப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை, மற்றும் மருத்துவக்குழு சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு பி.சி.ஆர் என்ற முறையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இதனை மாவட்ட ஆட்சியர் ராசமணி ஆய்வு செய்து தனிமனித இடைவெளி மூலம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.