ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு உதவிய நல்லறம் அறக்கட்டளை

நல்லறம் அறக்கட்டளை மூலம் 50 கிலோ அரிசி மற்றும் 10 ஆயிரம் பணம் வழங்கி உதவிய அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன்.

ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றவுடேனே நினைவுக்கு வருபவர் வடிவேலாம்பாளையம்
கமலாத்தாள் பாட்டி. கொரோனா எதிரொலி காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பொட்டுக்கடலை, உளுந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டது தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மிளகாய் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் புன்னகை மாறாமல் எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார். தன்னை தேடி பல பேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (27.04.2020) நல்லறம் அறகட்டளை தலைவர் அன்பரசன் கமலாத்தாள் பாட்டியின் வீட்டிற்க்கு நேரில் சென்று சந்தித்து 50 கிலோ அரிசி மற்றும் 10,000 ரூபாய் பணத்தை அளித்தார்.