ஆன்லைன் மூலம் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி மருத்துவ பொறியியல் துறையினரால் “ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் உயிரி மருத்துவ பொறியியலின் சமீபத்திய போக்கு” எனும் தலைப்பில் மெய்நிகர் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சியானது ஏப்ரல் 26 முதல் 30 வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வானது இணையம் வாயிலாக நடைபெற்று வருவதால் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள் பயன்படுகின்றனர். ரூர்கேலா தேசிய தெழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் சிவராமன் முன்னிலையில் கல்லூரி முதல்வர் பொற்குமரன் ஏப்ரல் 26 அன்று நிகழ்வானது துவக்கி வைக்கப்பட்டது. உயிரி மருத்துவ பொறியியல் துறைத் தலைவர் பிரபாகர் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராம் குமார் அவர்களால் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டு முதல் அமர்வானது ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவுத் தலைவர் ரமேஷ் புடலே அவர்களால் வழி நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர் சிவராமன் “மின் இருதயவியலில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம்” குறித்து எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து பு.ச.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியை மலர் “புற்றுநோய் கண்டறிதலில் மருத்துவ படசெயலாக்கப் பண்புகள்” பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.