இட்லி பாட்டிக்கு உதவி கரம் நீட்டிய நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ். பி. அன்பரசன்

தமிழ்நாட்டில் இட்லி எப்படி பேமஸே அதே போல் கோவையில் 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளும் பேமஸ் தான். காரணம் இன்றும் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பதுதான்.
இவரை பலரும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, அவரு‌க்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன் கமலாத்தாளை நேரில் சந்தித்து அவரது பணி நின்று விடாமல் தொடர அரிசி மற்றும் பண உதவி செய்தார். இவர் பலவிதமாக நற்பணிகள் செய்து வருகிறார். அதில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.