காவலர்களுக்கு பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பணிக்கு அனுமதி

கொரானா நோய்த்தொற்று பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராட மருத்துவர்களும், காவல்துறையினரும் தான் முதல் வரிசை வீரர்களாக நிற்கின்றனர்.

இந்நிலையில் நோய்தொற்று பரவலை தடுக்க சாலைகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் காவல்துறையினரால் வாகனங்கள் சோதனை இடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணியில் ஆயுதப்படை காவலர்கள், அதிவிரைவு படையினர் மற்றும் காவல் நிலைய காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு நோய்த்தொற்று பரவாத வகையில், அனைத்து காவலர்களும் தீவிர மருத்துவ சோதனைக்கு பிறகே பணிக்குச் செல்ல அறிவுறுத்த படுகின்றனர். இவ்வாறு பணிக்குச் செல்லும் காவலர்கள் கோவை பிஆர்எஸ் மைதானத்தில் மருத்துவர்களின் சோதனைக்கு பிறகு சான்றிதழ்களைப் பெற்று உரிய அதிகாரிகளிடம் காண்பித்து பிறகு பணிக்கு செல்வதற்கும், பணியை நிறைவு செய்து வீடு திரும்புவதற்கு முன் மருத்துவ சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.