பாரதிய ஜனதா அலுவலகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா

டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்திய அளவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில்,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தின் வைக்கப்பட்டிருந்த டாக்டர்.அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தயாரித்துக் கொண்டுவந்த சுகாதாரமான மாஸ்க் மாவட்ட தலைவரிடம் ஒப்படைத்தனர், இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.