தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் சார்பில் கிருமி நாசினி பாதை திறப்பு

தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் சார்பில், உக்கடம் மற்றும் வெரைட்டி ஹால் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் தி சென்னை சில்க்ஸ் இயக்குனர் வினீத்குமார் ஆகியோர் கிருமி நாசினி பாதையை திறந்து வைத்தனர். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் கோவை ஜுவல்லரி அசோசியேஷன் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.