தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் மருத்துவர்களுக்கு இலவச கவச உடைகள்

கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பாக கவச உடைகள் வழங்கப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் தூய்மைப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பாக பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் இயக்குனர் வினித் குமார் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்கினார். தி சென்னை சில்க்ஸின் உதவி பொது மேலாளர் தேவன், மக்கள் தொடர்பு அதிகாரி சேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.