ரத்தினம் கல்வி குழுமங்களின் அடல் இங்குபேஷன் மையம் துவக்கம்

கோவை உலக தரம் வாய்ந்த தொழிலதிபர்கள் நிறைந்த நகரம். மேலும் கல்லூரிகளும், அதில் இளைங்கர்களும் நிறைந்த நகரம். இங்கு தொழிலதிபர்களை விட தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகம்.

இந்த தொழில்முனைவோர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாகும் தொழில்முனைவோருக்கான
சந்தைவாய்ப்பினைக்கண்டறிந்து தமது மூலதனத்தைத் திறம்படப்பயன்படுத்துவதற்கு வல்லுநர்களின்
சிறந்த வழிகாட்டல் அவசியமாகின்றது.


அவ்வகையில் ரத்தினம் கல்விக் குழுமத்தின் அடல் இன்னவேசன் மிஸன் திட்டத்தில் AIC RAISE என்னும் தொழில்முனைவோருக்கான மையம் ரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டது.
இதனை இந்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனத்தின் கூடுதல் செயலருமான ஆர். ரமணன், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் துவங்கிவைத்தனர்.

மேலும் இதில் ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஏ செந்தில்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் The Global coo of Bahwan cyberTek குழுமத்தின் முன்னாள்
தலைவர் வி. எம் முரளிதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.