பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் பாலிமீட் 2020

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் அனைவரும் அவர்களுடன் எதேனும் ஒரு தொழில்நுட்ப கருவியே, பொருளே இல்லாமால் இருக்க மாட்டார்கள். காரணம் இந்த உலகம் முழுவதும் இயற்கையால் உருவானாலும், தொழில்நுட்பத்தால் தான் இயங்குகிறது. இத்தகைய தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்தும் விதமாக பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பாலிமீட் 2020 தேசிய அளவிலான தொழில்நுட்ப நிகழ்ச்சி பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கொடிசியாவின் தலைவர் ராமமூர்த்தி கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் கிரிராஜ், மாணவர் அணி முதன்மை ஆலோசகர் மோகன் சிவகுமார் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் தலைமை வகித்தார். மேலும் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தொழில் நுட்ப திறனை வெளிப்படுத்தும் விதமாக  ‘டெக்னோ பிளஸ், வினாடி வினா, போஸ்டர் பிரஸ்ன்டேஷன்’ என பல தொழில்நுட்ப பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

40 பிற பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இதில் 260 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, உள் மற்றும் வெளி பாலிடெக்னிக் போட்டியாளர்களில் முதல் முன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.