பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திர தினவிழா இன்று (15.8.17) கொண்டாடப்பட்டது. ஆ.கணபதி, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேசியக்கொடியினை ஏற்றி, சிறப்புரையாற்றினார்.

மேலும் மாணவ மாணவர்களின்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தேசபக்தியை வலியுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.