மின்னணு கழிவுகள் சேகரிக்கும் பணிகள் தொடக்கம்

கோவை மாநகராட்சியில் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் பணிகளை மாநகராட்சி

ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைத்தார்கள்.

கோவை மாநகராட்சியில் உள்ள பிரதான அலுவலகம், அனைத்து மண்டல
அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், மாநகராட்சி சுகாதார மையங்கள், மாநகராட்சி
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி
குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகள் (E-Waste)
மற்றும் மின்சார கழிவுகளை மேலாண்மை செய்யும் பொருட்டு கோவை மாநகராட்சி
மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெற்ற கிரின் எரா (GREEN ERA
RECYCLERS) மறுசுழற்சி நிறுவனத்துடன் இணைந்து மின்னணு கழிவுகள் மற்றும் மின்சார
கழிவுகளை தனியாக சேகரிக்கும் வாகனத்தின் பணியை கோவை மாநகராட்சி
ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் கோவை மாநகராட்சி பிரதான
அலுவலகத்தில் கொடியசைத்து துவங்கி
வைத்தார்கள்.

இப்பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மின்னணு கழிவுகள் மற்றும் மின்சார கழிவுகளை பிரித்து தனியாக சேகரிக்கும் பணிக்கு நிறுவனங்கள் மற்றும்
பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பு தருமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்
மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி ஆணையாளர் வருவாய் அண்ணாதுரை, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், தூய்மை பாரத பணிகள் ஒருங்கிணைப்பாளர் திருமால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.