காய்கறி விதைகளை பகுப்பாய்வு செய்தபின் விற்பனை

காய்கறி விதைகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என கோவை, விதை பரிசோதனை அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பெரும்பாலும் வெண்டை, மிளகாய், கத்தரி, புடலை, பூசணி, வெள்ளரி, பரங்கிக்காய், சுரைக்காய், பாகல், அவரை, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீட்டூட், வெங்காயம் என அனைத்து வகை காய்கறிகளும் பயிரிடப்படுகிறது.  கோவையில் உழவர் சந்தை, வாரச்சந்தை, பழமுதிர் நிலையங்கள்  என பலவகையில் தரமான காய்கறிகள் மக்களை சென்றடைகிறது.  அதனால், இங்கு காய்கறிகள் உற்பத்தி என்பது மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

எனவே,  தனியார் விதை உற்பத்தியாளர்கள் பெரும் தொழில்முனைவோராக உள்ளனர். இதன் முக்கியதுவம் கருதி தங்களது பண்ணைகளில் உற்பத்தி செய்யும் காய்கறி விதைகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தி பின்னர் விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.  காய்கறி விதைகள் பெரும்பாலும் வீரியம் ஒட்டுவகை என்பதால் அவற்றின் விலையும் அதிகம்.  எனவே, விதை தரம் குறையாமல் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விதை பகுப்பாய்வு செய்ய தங்களிடம் உள்ள கீழ்குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு விதைக்குவியலில் இருந்தும் மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு கோவை தடாகம் ரோட்டில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கத்திரி – 15 கிராம்/விதைகுவியல்

மிளகாய் – 15 கிராம்/விதைகுவியல்

பாகல்,

வெண்டை – 140 கிராம்/விதைகுவியல்

தக்காளி – 7 கிராம்/விதைகுவியல்

அவரை – முட்டைகோஸ் – 10 கிராம்/விதைகுவியல்

பூசணி, காலிபிளவர் – 10 கிராம்/விதைகுவியல்

வெங்காயம் – 80 கிராம்/விதைகுவியல்

விவசாயிகளும் தங்களிடம் உள்ள காய்கறி விதைகளை விதைப்பதற்கு முன்னர் முளைப்புத்திறன் பரிசோதனை செய்தபின் விதைத்தால் பெரும் பண நஷ்டத்தை தவிர்க்கலாம்.  மேலும் விபரங்கள் அறிய, விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், 1424ஏ, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி எண் 0422-2981530