டிஜிட்டல் செட்டப் பாக்ஸ்

தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் “டிஜிட்டல் மையமாக்கப்படுவதை” குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: பொதுமக்களுக்கு விரைவில் இலவசமாக “டிஜிட்டல் செட்டப் பாக்ஸ்” வழங்கப்படவுள்ளது. உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் செட்டப் பாக்சை விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கவும்.

மேலும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பை செய்வதை தவிர்க்கவும். சமீப காலமாக பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டப் பாக்சை வாங்க வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் டிஜிட்டல் செட்டப் பாக்சை பெறுவதற்கு www.tactv.inஎன்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 15.08.17 க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.