கால்நடைகள் பொதுமக்களுக்கு இடையுறாகக் கூடாது

– ஷ்ரவன்குமார் ஜடாவத்

பொதுமக்கள் கவனத்திற்கு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை மற்றும் இதர கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் இடையுறாக பொது இடங்களிலோ அல்லது சாலைகளிலோ சுற்றித்திரியும்படி விடக்கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது. தங்களது சொந்த இடத்தில் மட்டுமே பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் மீறினால் மேற்படி கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். கால்நடைகளின் உரிமை கோரும் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க இயலாது என கோவை  மாநகராட்சி ஆணையாளர்  ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.