இந்தியாவின் நெ.1 பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட அமிர்தா பல்கலைக்கழகம்

டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகங்களின் தர வரிசை பட்டியலில் இந்தியாவின் நெ.1 பல்கலைக்கழகமாக அமிர்தா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மாதா அமிர்ந்தானந்தமயி கலந்துகொண்டு விருதினை பெற்றுகொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம், இந்தியாவின் முதல் நிலை தனியார் பல்கலைக்கழகமாக அமிர்தா வித்யா பீடத்தை தேர்வு செய்துள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உலக பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்களின் நெ.1 விருது மற்றும் சான்றிதழை, டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் தலைமை புள்ளி விவர அதிகாரி,  டன்கன் ரோஸிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய டன்கன்ரோஸ், ‘‘உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்திற்கு இந்த விருது வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் வேந்தராக உள்ள அம்மா, அவர்களின் கீழ் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில், அறிவு சார் மற்றும் கல்வி கற்கும் முறைகள் ஆகியவை மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எங்களை தொடர்வதோடு மட்டுமின்றி, உங்களோடு இணைந்து, அறிவு சார் மற்றும் கல்வி கற்பதில் சமுதாயத்துக்காக பாடுபடுவோம் என கூறியுள்ளார்.

சிறந்த கல்வி நிறுவனமாக இந்திய அரசு ஏற்கனவே அமிர்தா பல்கலையை தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.