கேபிஆர் முன்னாள் மாணவர்களின் புதிய படைப்பு

தண்ணீரை சுத்திகரிக்கவும், சத்தான, சுவை மாறாமல் மாற்றக்  கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பினை கேபிஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான அறிமுக விழா  கேபிஆர் கல்லுரியில் நடைப்பெற்றது.

தண்ணீர் சுத்திகரிக்கும் புதிய படைப்பான அத்யா அக்வா டெக்  கேபிஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான மோகன் குமார் மற்றும் ஜோஹின்தர்  ஆகியோர்களால் உருவாக்கப்பட்ட இந்த படைப்பினை அறிமுகப்படுத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த அறிவியலாளர் டேனியல் செல்லப்பா,  கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பி.டி. சிகாமணி, தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.