கோவையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.கோவை புளியங்குளம் விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது . மக்கள் மிக ஆர்வத்துடன் வழிபாட்டில் கலந்துகொண்டு இறையாசி பெற்றனர்.