தடைகளை தாண்டிய வர்ஷா

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் எண்ணிக்கை மிக குறைவு. அதில் நாம் அறிந்தவரையில் கடைகடையாக சென்று பிச்சை எடுபவர்களாகவும், பாலியல் தொழிலில்  இருபவர்களாவும் தான் இது வரை நாம் பார்த்திருக்கிறோம். இருபினும் இவர்கள் சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைப்பதில்லை.

இந்த தடைகளை கடந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த வர்ஷா என்ற திருநங்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புறவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார்.

மூன்றாம் பாலினத்தோரும் உயர்க்கல்வி பெற பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கெனவே வழிவகை செய்துள்ளது. இருப்பினும், பெற்றோரின் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால், பல திருநங்கைகள் தங்களின் கனவை நோக்கி பயணிக்க முடிவதில்லை.

இந்த கல்லூரி இவரை ஊக்குவிற்கும் வகையில் இவரது கல்வி கட்டணத்தில் 50% சலுகை கொடுத்துள்ளது.

இந்த கல்லூரி இவருக்கு சலுகை அளித்துள்ளது இவரை போன்றவர்கள் ஆர்வம் கொண்டோரை ஊக்குவிற்கும் வகையில் உள்ளது.