குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

இந்த ஆண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 81 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 81ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 20,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதிலிருந்து தகுதியான விண்ணப்பங்களாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான மாணவர் சேர்க்கை அண்மையில் நிறைவடைந்தது.

குறிப்பிட்ட சேர்க்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் மட்டும் அண்மையில் குலுக்கல் முறையில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்த ஆண்டு முதல் இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.