மீண்டும் நிபா !

கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கிய ஒன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. அது நிபா வைரஸ். இது வௌவல் என்னும் பாலூட்டி பறவை மூலம் இது பரவுகின்றது என்று நாம் அறிவோம். இந்த வைரஸ் மூலம் கடந்தாண்டு  கேரளாவில் 17 பேர் இறந்துள்ளனர். இது கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அச்சுறுத்தியது.

இந்நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடிவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் எர்னாணாகுளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு  நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரிச்சூர் சென்றிருந்த பொழுது இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதோடு 2 சேவிலியர்கள் மற்றும் 22 மாணவர்கள் உட்பட மொத்தம் 88 பேர் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நிபா வைரஸ் காய்ச்சல் பற்றி எந்தவித அச்சமும் வேண்டாம் என்றும், நிபா வைரஸ் பாதிப்புள்ள திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,என்றும் கூறியுள்ளார். மக்கள், இது விலங்கு மூலம் பரவும் வைரஸ் என்பதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்: லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் ஏற்கனவே  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த அறிகுறிகள் எதாவது இருந்தால் சுய மருத்துவம் எடுத்து கொள்ளாமல்,உடனடியாக மருத்துவமையை அணுகி இதற்கான  மருத்துவர்களின் ஆலோசனை படி மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது.