ஆஸ்துமாவிற்கான சிறந்த சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்

ஆஸ்துமா பற்றிய அச்சமும்,  மூடநம்பிக்கையையும் போக்குவதே ஆஸ்துமா நாளின் முக்கிய நோக்கம். நோயாளிகளுக்கு சுவாச மருந்து சிகிச்சை பறறிய சிக்கல்களை களைவோம். சமுதாயத்தில் இதை ஏற்றுக் கொள்ளும் வகையிலும், மருத்துவருக்கும், நோயாளிகளுக்கும் இடையே உள்ள கருத்து பரிமாற்றத்தையும் எளிதாக்குவோம்.

ஆஸ்துமா, நீண்டகால நோயாக உள்ளது. தொடர்ச்சியான சுவாச குழாயில் ஏற்படும் வீக்கம், அவ்வப்போது இது மாறுபடும்.  மருத்துவர்களின் மதிப்பீட்டின்படி, சுவாசம் தொடர்பான நோயால், சராசரியாக 40 நோயாளிகள் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.  இதில் பெரும்பாலனோர்  60% ஆண்களாவே உள்ளனர்.  குழந்தைகளுக்கான  ஆஸ்துமாவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகுிறது. (ஒவ்வொரு மாதமும் 25–30 குழந்தைகள் கூடுதலாகி வருகின்றனர்). கடந்த  சில ஆண்டுகளை காட்டிலும், 2018 வரையில் சராசரியாக 5%  ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளாக சுவாச மருந்துகளை பயன்படுத்தும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.  டீன் ஏஜ் வயதுக்கு முன் பயன்படுத்தியவர்களில் 20% இதை முற்றிலுமாக கைவிட்டுள்ளனர்.

ஆஸ்துமா ஏற்பட, காற்றில் துாசு அதிகமாதல்,  புகை, குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாமை, காலநிலை வேறுபாட்டால் ஏற்படும் ப்ளூ காய்ச்சல், வைரஸ் தொற்று போன்றவை காரணமாக அமைகின்றன. நோயாளிகளிடையே அறியாமையும் அதிகமாக உள்ளது.

உலக ஆஸ்துமா தினத்தையொட்டி கோவை சுவாசநோய் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையின் மார்பு நோய் மருத்துவர் டாக்டர் ஜெயமோகன் உன்னிதன் பேசுகையில்,  ‘‘ ஆஸ்துமா மற்றும் சுவாச சிகிச்சை பற்றி நிலவும் தவறான கருத்துக்களை மாற்ற வேண்டும்.  சுவாச மருந்து சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசத்தில் செல்லும் மருந்து, நேரடியாக நுரையீரலை சென்றடைகிறது.  இந்த சிகிச்சை முறையின் முழு பயனை பெற மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.  சுவாச மருந்து சிகிச்சையால் ஆஸ்துமா தடுக்கப்படுவதோடு, நிவாரணமும் அளிக்கப்படுகிறது.

ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள் இல்லாதபோது, ஆஸ்துமா இல்லை என்பதல்ல பொருள்.  ஆஸ்துமா நோய் மேலாண்மையில் இதுவே பெரும் சவாலாக உள்ளது. ஆஸ்துமாவின் தீவிரம் குறைந்ததும், மருந்துகளை நிறுத்தி விடுகின்றனர்.  இது,   மருந்து செலவை குறைக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக,  இது நிலைமையை மேலும் மோசமாக்குவதோடு, எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்ற இரட்டை பாதிப்பை உண்டாக்குகிறது.  அறிகுறிகள் இல்லை என்றால், ஆஸ்துமா இல்லை என்ற அர்த்தம் இல்லை. ஆஸ்துமா நோய்க்கு நீண்ட கால சிகிச்சை அவசியம். பல நோயாளிகள், மருந்துகளை பாதியில் நிறுத்துவதால், மேலும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  மருந்தை நிறுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

கோயம்புத்துார் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் நேமிநாதன் கூறுகையில், ‘‘  ஆஸ்துமா போன்ற நாள் பட்ட நோய்களுக்கு விழிப்புணர்வு கல்வி அவசியம்.  புரோக்ஜிந்தாகி என்ற திட்டம், ஆஸ்துமாவுக்கு எதிரான வெற்றி என்பதை வலியுறுத்துகிறது.  நோயாளிகளை இந்த திட்டத்தில் பங்கேற்க செய்வதோடு, சுயமான சிகிச்சை அளிக்கவும், கூடி விவாதிக்கவும் வழி வகுக்கிறது. நோயை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உதவுகிறது. ஆஸ்துமாவை மேலாண்மை செய்ய உதவி செய்வதோடு,  உலக ஆஸ்துமா நாளில், அவர்களது வாழ்நாளை அதிகரிப்போம்,’’ என்றார்.

ஆஸ்துமாவிலிருந்து விடுபட வேண்டுமானால்,  சுவாச மருந்தின் அவசியத்தை உணர்ந்து, தடைகளை தகர்க்க வேண்டும். இதற்கான சிகிச்சைகள் இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒரு நாள் இரவு மருத்துவமனையில் தங்குவதற்கான செலவு தான் இது.

கோவை, சுவாச சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையின் மார்பு பிரிவு மருத்துவர் டாக்டர் ஜெயமோகன் உன்னிதன் கூறுகையில், ‘‘‘ கார்ட்டிகோஸ்டீராய்டு தெரபி, ஆஸ்துமா மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பான சிகிச்சை முறைகள் மற்றும் சரியான அளவு மருந்து அளித்தல் மிகுந்த பயன்தரும். மருந்தை சுவாசத்தின் வழியாக உள்ளிழுக்கும் சிகிச்சை முறையான கார்ட்டிகோஸ்டீராய்டு தெரபி, நேரடியாக சிறிய அளவிலான மருந்து நேரடியாக வீக்கம் உள்ள காற்றுப்பாதைக்கு செல்கிறது. குறைவான பக்க விளைவுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் வாய்வழியாக சாப்பிடும் மருந்து, கூடுதலான வீரியமிக்கதாக இருப்பதோடு, உடலின் தேவையில்லாத பிற பாகங்களுக்கும் சென்று பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது,’’ என்றார்.

கார்ட்டிகோஸ்டீராய்டு தெரபி, ஆஸ்துமா மேலாண்மையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த சிகிச்சை, உயிரை காப்பாற்றுவதோடு, சுவாச குழாயில் உள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த ஸ்டீராய்டு மருந்துக்கும், வேறு சிகிச்சைக்கு பயன்படும் ஸ்டீராய்டு மருந்துக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது, ஆரோக்கியமும், பொருளாதாரமும் தான். மருந்தை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மருத்துவ செலவுகள் குறையும்.

தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம்: கார்ட்டிகோஸ்டீராய்டு தெரபி, மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன், மிகவும் மிதமான முதல் கனமான மருந்துகள் வரை, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பயன்படுத்தும் சுவாச மருந்து சிகிச்சை.  நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, ஆஸ்துமா தாக்குதல்களிலிருந்து மீள வழி வகுக்கிறது. ஆஸ்துமா அடிக்கடி ஏற்படாமல், கட்டுப்பாட்டுடன் இருக்கவும், வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவை குறைக்கிறது. அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை தடுக்கிறது.

இந்த ஆண்டு ஆஸ்துமா நாளில், ஆஸ்துமாவை வென்றவர்களின் விழாவாக கொண்டாடப்படுகிறத. சரியான சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு ஆஸ்துமாவை வெல்ல உதவும். சுவாச மருந்து சிகிச்சையால் எப்படி ஆஸ்துமாவை வெல்லலாம் என அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். பெரோக்ஜிந்தாகி என்பது, ஆஸ்துமாவை வெல்வது தான்.