பெண்களுக்கு இடையிலான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில்  பெண்களுக்கு இடையிலான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய தாக்கம் என்னும் தலைப்பிலான  ஒரு நாள் கருத்தரங்கம்  T K P அரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கத்தின் துவக்க விழாவில் வரவேற்புரை ஆற்றிய கல்லூரியின் முதல்வார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரான கோவையிலுள்ள மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குநர்  மருத்துவர்  மிருதுபாஷினி கோவிந்தராஜன் அவர்களையும், கல்லூரியின் இணைச்செயலர், துணைஇணைச்செயலர், அகில இந்திய வானொலி நிலையத்தினர் மற்றும் விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் தாம் மகிழ்வுடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

தலைமையேற்று உரை நிகழ்த்திய கல்லூரியின் துணை இணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன் தமது உரையில் பெண்களுக்கு அன்றாடக் கடமைகளோடு தமது உடல் நலத்தையும் பேணுவதிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதனால் தினமும் உடற்பயற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். சிறப்புவிருந்தினர்  மருத்துவர்  மிருதுபாஷினி அவர்கள் தமது உரையில் சுகாரத்தைப் பேணி உடல் நலத்தில் பெண்கள் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். உடலுக்குச் சத்தான உணவினை குடும்பத்தாருக்குக் கொடுப்பது போல பெண்களும் அத்தகைய சமச்சீர்  உணவுகளை உண்ணுதல் வேண்டும்.

உடற்பயிற்சி இன்மையும் உணவுப்பழக்கம் போன்ற பலவேறு நோய்கள் உண்டாகின்றன என்றும் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், இரத்தச்சோகை, குழந்தையின்மை போன்ற நோய்களுக்கு சிறந்த உணவுகள், உடற்பயிற்சி மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் எளிதாக விடுபடலாம் என்றும் கூறினார். அடுத்து மகளிர் மையத்தைச் சேர்ந்த முடநீக்கியல் துறையை சேர்ந்த வைஷாலி அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் கைகால்வலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவற்றிற்கு மிக எளிமையான முறையில் முடநீக்கீயல் உடற்பயிற்சிகளின் மூலம் தீர்வு காணலாம் என்றும் முடநீக்கியலின் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர்  மகளிர்  மையத்தின் உணவியல் துறையைச் சார்ந்த சந்திரகலா அவர்கள் காலை உணவை உண்ணாமல் இருந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என்றும், ஒருநாள் முழுவதும் எத்தனை மணிக்கு என்ன மாதிரியான சத்தான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கினார். பின்னர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பிரியாகல்யாணசுந்தரம் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.