ஹலோ எப்.எம் 106.4, KIT ன் “வெற்றி நமதே”

ஹலோ எப்.எம் 106.4 மற்றும் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி இணைந்து +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ரமேஷ் பிரபா, கல்வியாளர் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் மாணவ – மாணவியர்களின் வாழ்வில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒருவன் தன் வாழ்வில் தான் அடைய நினைக்கும் இலட்சியத்தை அடைவதற்கு +2 தான் அடித்தளம் என்பதையும் எடுத்துரைத்தார் மற்றும் +2வில் அவர்கள் பெறும் மதிப்பெண் தான் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையாக அமையும் என்று கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவ – மாணவியர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி அந்தந்த துறைச்சார்ந்த கல்வியாளர்களை கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவ-மாணவியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு +2க்கு பிறகு மேற்படிப்பினை தேர்வு செய்வது பற்றியும் அதன் மூலம் கிடைக்ககூடிய வேலைவாய்ப்பினை பற்றியும் கல்வியாளர்கள் தெளிவாக கூறினர். இணையதள பயன்பாடுகள் குறித்தும் அதில் உள்ள நன்மை, தீமைகள் பற்றியும் தெளிவான ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், KIT கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், செயல் அறங்காவலர் A.சூர்யா, முதல்வர் N.மோகன்தாஸ் காந்தி, டீன் – மாணவர் அமைப்பு சீ.சுரேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.