சிபாகாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா 

கோயம்பத்தூர் பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேஷனின் (சிபாகா) 12வது நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

சிபாகாவின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் குழு 

  • எஸ்.பி.இராமநாதன், தலைவர்
  • ரம்யா ஆர். செந்தில், தலைவர் தேர்வு
  • பி.ரவிசந்திரன், செயலாளர்
  • ஷம்சுதீன், பொருளாளர்
  • ஜே.உதயானந்த், இணை செயலாளர்

இதில் மலேசிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

ரத்னா குழும நிறுவனங்களின் தலைவர் பி.எல்.கே. பழனியப்பன் மற்றும் டிசைன் குரூப் ஆர்க்கிடெக்ட் லக்ஷ்மணன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.