நமக்குள் சண்டை போட்டுக் கொள்கிறோம்: அஸ்வின் பளிச்

தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் நுழைவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ‘பந்து வீசுவதும், பேட்டிங் செய்வதும் திறமை அல்ல. மனத் தடைகளை உடைத்து அதைத் தாண்டி வெளியே வர வேண்டும். சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் நுழைவது என்பது சாமானிய விஷயம் கிடையாது.

நமக்குள் பல சண்டைகள் போட்டுக் கொள்கிறோம். அந்த கிணற்றைத் தாண்டி மேலே வந்து எட்டிப் பார்த்தோம் என்றால் அது எவ்வளவோ கடினமான பயணம் என்பது புரியும். அந்த பயணத்திற்கு நம்மைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்றார்.