ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா

இந்தியத் திருநாட்டின் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு,  ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையினரின் பிரமிட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இக்கல்லூரி மாணவிகள் மூன்று பேரும் சென்னையில் நடைபெறும் அணிவகுப்பில் ஒருவரும் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.