இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் உலகளாவிய கல்விப் பயணம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதுகலை  மேலாண்மை   மாணவர்கள் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்ட க்நொவ் ஸ்கில்ஸ், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET),  கருத்தரங்கம் கோலாலம்பூரில் நடைபெற்றது

இதில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதுகலை மேலாண்மை  மாணவர்கள் ஐம்பதுபேர்  மற்றும் இரண்டு ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .  உலகளாவிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு, அனுபவ கற்றல் கூறுகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

இதன் மூலம் மாணவர்கள் உலகளாவிய தொழில் நுட்பங்கள் மற்றும் வளர்ந்து  வரும் தகவல், கட்டுமான, ஆராய்ச்சி திறன்களை வளர்த்துக்கொள்ள வழிவகுத்தது.

இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் இணை செயலாளர்  பிரியா ஆகியோர்  சர்வதேச கருத்தரங்கில் நேரிடையாக கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்லுரி நிர்வாகம் சார்பாக  நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தினர்.