ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பிராஜக்ட் எக்ஸ்போ-2022 என்ற தொழில்நுட்ப கண்காட்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமா முன்னிலையில் கோ- இன்டியா நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் ராஜாஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புக்கள் பார்வைக்கு வைக்கபட்டிருந்தது இதில் மெக்கானிக்கல் துறையில் 29, எலக்ட்ரிக்கல் 13, கணிப்பொறி துறையில் 14, ஆட்டோமொபைல் துறையில் 9, கட்டிடவியல் துறையில் 17, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவியியல் கட்டுபாட்டு துறை சார்பாக 20 படைப்புகள் இடம்பெற்று இருந்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மெக்கானிகல் துறை தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் உமா தலைமையுரையாற்றினார். சிறப்பு விருத்தினராக, ராம்கார்த்திக் பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜராமநாதன் கலந்து கொண்டு கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

மேலும் கண்காட்சியில் சிறந்த படைப்புக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு துறைகளைச் சார்ந்த படைப்புகளில் முதல் மூன்று இடங்களுக்கு தனித்தனியே பரிசு தொகையுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.