ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை ஒவியங்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த ஒவியங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் 150 க்கும் மேற்பட்டுள்ள ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல கீழடி, பொருநை, கொடுமணல், மயிலாடும்பாறை அகழாய்வுகளிகளில் கண்டறியப்பட்ட பொருட்களும் இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர்கள் தென்னரசு, சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி மற்றும் நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஓவியக் கண்காட்சியை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் பார்வையிட்டார்.