வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான இணைய வழிப் புத்தாக்க பயிற்சி நான்காவது நாளாக திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம் சிறப்புரையாளராகப் பங்கு பெற்றார். அவர் தனது உரையில் கூறியதாவது: மாணவர்கள் தனது சுய அறிவை மேம்படுத்திக் கொண்டு அரசு மற்றும் அரசு சாராத் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை அணுகும் முறை என்ன என்றும் ஒரு இலக்கை அடைவதற்கான திறன்கள் எவை என்பது குறித்தும் விவரித்தார்.

மாணவர்கள் எப்போதும் எடுத்து என்ன என்ற குறிக்கோளுடன் செயல்படவேண்டும் என்றும் தனது உரையில் விளக்கினார்.

தமிழ்த் துறைத் தலைவர் சுரேஷ் பாடநெறிகள் குறித்து விளக்கினார். நிகழ்வில் தமிழ்த் துறை பேராசிரியர் சரவணகுமார் வரவேற்பு வழங்கினார்.