பத்திரபதிவு துறையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

கோவை ரேஸ் கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில், உள்ள துணை பதிவு துறை தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் மூலமாக, பத்திரபதிவு துறையில் பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும், வந்து கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் முதன்முறையாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தொடங்கப்பட்டது.

2021 மற்றும் 2022ம் ஆண்டு முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானிய கோரிக்கையின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று அறிவிப்பினை வெற்றிகரமாக செயல் படுத்தும் விதமாக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் பதிவு துறை சார்ந்த குறைகளை தீர்க்கும் முகாம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை பதிவுத்துறை, மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் நடைபெற்றது.

இந்த குறை தீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும், அந்தந்த பதிவுத்துறை அலுவலக எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலகங்களில், பத்திர பதிவு, திருமண பதிவு, வில்லங்கச் சான்று, மற்றும் பதிவுத் துறை தொடர்பான அனைத்துப் புகார்களையும், கோரிக்கைகளாக நேரடியாக அளித்து உரிய தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பத்திரப்பதிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாமில், பத்திரபதிவு துறை ஐஜி செந்தமிழ் செல்வன், மாவட்ட பதிவாளர் பிரபாவதி, சார் பதிவாளர் மற்றும் பணியாளர்கள், ரகோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.