கே.பி.ஆர் கலை கல்லூரியில் நவராத்திரி விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஸ்கூல் அஃப் லிபரல் ஆர்ட்ஸ் (SCHOOL OF LIBERAL ARTS) ஒருங்கிணைந்து வியாழக்கிழமையன்று (7.10.2021) நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து தொடங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் செ.பாலுசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர். மாணவர்கள் நவராத்திரி விழாவின் வரலாறுகளை எடுத்தியம்பினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.