தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக ஆளுநர் பாராட்டு!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேந்தர் அவர்களை 7.10.2021 அன்று சென்னையில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை தமிழக ஆளுநரிடம் எடுத்துரைத்து பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த வேளாண்மை சார்ந்த சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வழங்கினார். அச்சமயம் சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் தேசிய அளவில் வென்ற பசுமை மற்றும் தூய்மையான விருதுகளை மாணவர்களுக்கான அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் தோட்டக்கலை வனவியல் மற்றும் வேளாண் பொறியியல் துறையில் பெற்ற 3 விருதுகளை பற்றி ஆளுநரிடம் தெரிவித்தார். ஆளுநர் அவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தரவரிசையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமானது 33வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியமைக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார். விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கடுமையாக உழைத்து இப்பல்கலைக்கழகத்தின் மேலும் உயர்த்தி பல சாதனைகளைப் புரிய வேண்டுமென வாழ்த்தினர்.