“இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அஜினோமோட்டோ பாதுகாப்பானது”

ஜப்பானின் அஜினோமோட்டோ குழுமத்தோடு இணைந்த ஒரு நிறுவனமான அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், உயர்தர சீசனிங் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது. 2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது. தற்போது இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளை பிரதானமாக தென்னிந்திய மாநிலங்களில் விற்பனை செய்துவருகிறது.

இதுகுறித்த பத்திரிக்கை செய்தியில் அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இஷிகாவா-கட்சுயுகி கூறியதாவது: கரும்பு அல்லது மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உமாமி சீசனிங் கலவைப் பொருளாக, இயற்கையான நொதிப்பு செய்முறை வழியாக எம்எஸ்ஜி அஜினோமோட்டோ தயாரிக்கப்படுகிறது. உமாமி என்பது ஐந்தாவது அடிப்படை சுவையாகும். இறைச்சி சார்ந்த சுவை என இது வர்ணிக்கப்படுகிறது. வெங்காயம், காளான், பாலாடைக்கட்டி, சுரைக்காய் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இயற்கையாக கிடைக்கக்கூடிய குளூடாமிக் அமிலத்தின் இயற்கையான சுவையே உமாமி சுவை எனப்படுகிறது.

அஜினோமோட்டோவின் பாதுகாப்பு தன்மை, உலகளவில் புகழ்பெற்ற அனைத்து உணவு கட்டுப்பாடு ஒழுங்குமுறை அமைப்புகளாலும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு உணவு ஒழுங்குமுறை அமைப்புகளாலும் நுகர்வுக்கான அளவைப் பொறுத்தவரை எந்தவொரு வரம்பும் (தினசரி உட்கொள்வதற்குரிய வரம்பு அளவு) குறித்துரைக்கப்படவில்லை.

இதுகுறித்து அஜினோமோட்டோ இந்தியாவின், சந்தையாக்கல் மேலாளர், கோவிந்த பிஸ்வாஸ், கூறும்போது : நாம் உட்கொள்ளும் உப்பின் அளவை கணிசமாக குறைக்க நமக்கு உதவுவதே அஜினோமோட்டோவை பயன்படுத்துவதன் மிக முக்கிய பலனாகும். நமது வழக்கமான உணவுகளில் எம்எஸ்ஜி-ஐ (MSG) சேர்ப்பது, உப்பின் அளவை ஏறக்குறைய 37%வரை குறைக்க நமக்கு உதவும். ஏனெனில், வழக்கமான உப்போடு ஒப்பிடுகையில் அதன் சோடிய செறிவில் மூன்றில் ஒரு பங்கே எம்எஸ்ஜி-யில் (MSG) இருக்கிறது என்று கூறினார்.

பிரபல உணவுமுறை நிபுணரான, டாக்டர். தாரிணி கிருஷ்ணன் பேசுகையில், இயற்கை மூலப்பொருட்களிலிருந்து இது உற்பத்தி செய்யப்படுவதால் மோனோ சோடியம் குளூட்டாமேட் மனிதர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எம்எஸ்ஜி என்பது, நீர், சோடியம் மற்றும் குளூட்டாமேட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுவையூட்டியாகும். நாம் உட்கொள்கிற உணவுக்கு ஊட்டச்சத்து மதிப்பையும் இது சேர்த்து தருகிறது என்று கூறினார்.