எஸ்.என்.எஸ் கல்லூரியில் ‘உளியும் நானும்’ சிலை திறப்பு விழா

கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் படிக்கும் போதே அவர்களின் திறனறிவு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக உளியும் நானும் எனும் தத்ரூப சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் பயிலும் போதே மாணவ, மாணவிகளின் பல்வேறு துறை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களிக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன் மற்றும் தாளாளர் ராஜலட்சுமி ஆகியோரின் ஆலோசணைப்படி எஸ்.என்.எஸ் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் என இரு கல்லூரிகளின் வளாகம் முன்பாக உளியும் நானும் எனும் தத்ரூப சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எஸ்.என்.எஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள உளியும் நானும் சிலை திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் குழுமங்களின் தொழில் நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினராக RAF 105 பட்டாலியன் கமாண்டட் ஜெயகிருஷ்ணன் கலந்து கொண்டு தத்ரூபமாக அமைக்கப்பட்ட உளியும் நானும் சிலையை திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய நளின் விமல் குமார் கல்லூரி வளாகம் முன்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை ஒவ்வொரு மாணவனுக்கும் தன்னம்பிக்கையை ஊட்டும் உன்னத படைப்பாக இருக்கும் என பேசினார். விழாவில்,வால்வோ நிறுவன மேலாளர் ஆண்டணி அல்போன்ஸ், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.