புதிய கொரோனா கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு

கொரோனா பரவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளுக்கான சில விதிமுறைகளை வரும் 10 ம் தேதியிலிருந்து அமல்படுத்துகிறது.

அவற்றில் சில:

  • திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
  • விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.
  • நீச்சல் குளங்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே சேல்ல வேண்டும்.
  • தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்ப்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.
  • மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதில்லை
  • சர்வேதேச விமான போக்குவரத்திற்க்கான தடை தொடரும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
  • காய்கறி கடைகள்,பலசரக்கு கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்டுவர்.