பாரதியார் பல்கலையில் கொரோனா வார்டு அமைப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் மீண்டும் கொரோனா பரவி வருவதால், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 200ஐ கடந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் 400 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை, குளியலறை, உள்ளிட்ட வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் தொற்று பாதிப்பு நிலவரத்தின் உண்மை நிலையை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை தீவிரப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.