ஏப்ரல் 1 முதல் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

45 வயது மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு இன்று (23.3.2021) அறிவித்துள்ளது.

பாரத் பயோடேக்கின் கோவாக்ஸின் மற்றும்  சீரம் நிறுவனத்தின் கோவிஷில்டு  ஆகிய இரு தடுப்பூசிகள்  கடந்த ஜனவரி 16 ம் தேதியிலிருந்து முன்கள பணியாளர்கள், மருத்துவர்களுக்கு போடப்பட்டபட்டன.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுடைய இணை நோய் கொண்டவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தகுதி உடைய அனைவரும் பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறியுறுத்தினார்.

மேலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில்  தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும்  விதமாக மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோவிஷில்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய பிறகு 2 வது டோஸ் 28  நாட்களில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகு பின் செலுத்தினால் அதன் செயல் திறன் அதிகரிக்கும்.

இதுவரை 4.85 கோடி மக்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 32.5 லட்சம் டோஸ் மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.