பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய புதுச்சேரி செவிலியர்

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து முதற்கட்டமாக  கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. இன்று முதல் 60 வயது மேற்பட்டவர்கள், இணை நோய்கள் கொண்ட  45 வயது மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பிரதமருக்கு புதுச்சேரியை சேர்ந்த  நிவேதா என்ற செவிலியர் தடுப்பூசியை செலுத்தினார்.

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்திய  அனுபவத்தை பற்றி செவிலியர் நிவேதா  கூறியதாவது :

நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.பிரதமர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகிறார் என்பது இன்று காலை தான் எனக்கு தெரியும். பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டது. நான் புதுச்சேரி என்று சொன்னவுடன் தமிழில் எனக்கு வணக்கம் கூறினார் . அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தோல் மிக அழுத்தமாக இருக்கும் அதனால் பெரிய ஊசியாக செலுத்துங்கள் என கிண்டலாக சொன்னார் . அவரிடம் ஊசி செலுத்தப் பட்டுவிட்டது என்ற சொன்னவுடன் ஊசி செலுத்தியதே தெரியவில்லை என சொன்னார். அவருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.