கோவையில் அரசியல் போஸ்டர்கள் அகற்றம்

கோவை: தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவையில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று (26.2.2021) மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் அரசியல் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களை மாவட்ட நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன.மேலும், அரசியல் கட்சியினர் வரைந்த சுவர் ஓவியங்கள் அனைத்தும் அகற்றப்பட உள்ளன.