இன்று மாலை சட்டமன்றத் தேர்தல் தேதி  வெளியாகுமா ?

தமிழகம்,கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில்  தேர்தல் பிரச்சார பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை  நடத்துவதற்கான பணிகளை செய்து வருகின்றன. மேலும் இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.  தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களுக்கு சென்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 5 குழுவினர் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று (26.2.2021) மாலை 4.30 மணிக்கு  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.