தொண்டாமுத்தூரில் பல்வேறு  பணிகளை  அமைச்சர் வேலுமணி  துவக்கி  வைத்தார்

தொண்டாமுத்தூர் 87 வது வார்டு பகுதியில்  சாலை வசதி,பாதாள சாக்கடை, பூங்கா, குடிநீர்  உள்ளிட்ட  பல்வேறு பணிகளை  அமைச்சர் வேலுமணி துவக்கி இன்று (22.2.2021) துவக்கி  வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் புதிய தார்சாலை அமைத்தல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், உள் அரங்கத்துடன் கூடிய பூங்கா, மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்க, என சுமார் ஐந்து கோடியே இருபது இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.

நீண்ட நாள் கோரிக்கைளை நிறைவேற்றிய அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த பகுதி மக்கள், பணிகள் துவக்கிய இடங்களில் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில் குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால்,அவைதலைவர் எஸ்.எம்.உசேன், பகுதி துணை செயலாளர்  சிந்து இளங்கோ,87 வது வார்டு தலைவர் இளங்கோ,செயலாளர் பாஸ்கர்,துணை செயலாளர் கே.சி.செல்வகுமார், சிவா,சின்னதம்பி, விஜயகுமார், ரகு, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.