கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களில் காளையர் திருவிழா

கோவை, கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களில் இரண்டாம் ஆண்டு காளையர் திருவிழா (ரேக்ளா பந்தயம்) 14.2.2021 ஞாயற்றுக்கிழமையன்று நடைபெற்றது. கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இக்காளையர் திருவிழாவினை கே.பி.ஆர் கல்வி நிறுவனமும் ரேக்ளா கிளப்பும் இணைந்து சிறப்பாக நடத்தினர்.

பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் எனும் வகையில் நடைபெற்றது. 200,300 மீட்டரில் தனித்தனியே வெற்றி பெற்ற காளைகளுக்கு சிறப்புப் பரிசாக முதல் பரிசு 6 கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசு 4 கிராம் தங்க நாணயம், மூன்றாம் பரிசு 2 கிராம் தங்க நாணயம், நான்கு முதல் பத்து பரிசுகளுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கி பாராட்டப்பட்டது. சிறந்த காளைகளைப் பாராட்டும் வகையில் கோப்பைகளும் வழங்கப்பட்டது.